இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செய்தியறிக்கை

JKR  ஞாயிறு, 21 மார்ச், 2010


 

பான் கீ மூன்
பான் கீ மூன்
பான் கீ மூன் காசாவுக்கு விஜயம்
மத்திய கிழக்கின் காசா பிராந்தியத்தில், இஸ்ரேலால் விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை கடுமையாக விமர்சித்திருக்கின்ற ஐக்கியநாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள், இதனால், அங்கு வாழும் பாலத்தீனர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு துன்பங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இஸ்ரேலின் கொள்கை மிதவாத பாலத்தீனர்களை குறைத்து மதிப்பிடவும், தீவிரவாதிகளை ஊக்கப்படுத்தவும் செய்கிறது என்றும், அதன் மூலம் எதிர்மறையான விளைவே ஏற்படும் என்றும் காசாவில் பேசுகையில் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டில் ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவினர் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசாவில் இஸ்ரேல் கடுமையான தடைகளை அமல்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலத்தீனர்களுக்கும் இடையிலான சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் முயற்சியாக பான் கீ மூன் அவர்கள் மத்திய கிழக்குக்கு விஜயம் செய்துள்ளார்.


வாக்குகளை மீள எண்ண வேண்டும் என்ற கோரிக்கையை இராக்கின் தேர்தல் ஆணையம் நிராகரித்தது
வாக்கு எண்ணும் பணிகள்
வாக்கு எண்ணும் பணிகள்
இராக்கில் அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் கைகளால் மறுபடியும் எண்ணப்பட வேண்டும் என்று அதிபர் தாலபானியும் பிரதமர் நூரி அல் மலிக்கியும் விடுத்த கோரிக்கையை அந்நாட்டின் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
பதிவான வாக்குகளை நாடு முழுவதும் கைகளால் மீண்டும் எண்ண அதிக காலம் பிடிக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
வாக்குகளை எண்ணும் பணியில் பயன்படுத்தப்பட்ட கணிணிக் கட்டமைப்பில் பழுது இருப்பதாக பிரதமர் மலிக்கியின் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
போட்டியில் தான் முன்னிலையில் இருந்தபோது தேர்தல் நடைமுறைகளை பிரதமர் மலிக்கி பாராட்டி வந்தார் என்றும் தற்போது முன்னாள் பிரதமர் அயத் அல்லாவி சற்று முன்னிலை வகிக்கும் நிலையில், வாக்கு எண்ணும் நடைமுறை பற்றிய தனது நிலைபாட்டை பிரதமர் மலிக்கி மாற்றிக்கொண்டுள்ளார் என்றும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.


ஜொஸ் வன்செயல் விசாரணைகள் முடிந்ததாக நைஜீரிய பொலிஸார் அறிவிப்பு
படுகொலை செய்யப்பட்டவர்கள்
படுகொலை செய்யப்பட்டவர்கள்
நைஜீரியாவில் மத்திய நகரான ஜொஸ்ஸுக்கு அருகே இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வன்செயல்களில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளை தாம் பூர்த்தி செய்துள்ளதாக நைஜீரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
164 சந்தேக நபர்கள் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதம் மற்றும் கொலை ஆகிய குற்றங்கள் உட்பட பல குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட உள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகத்தவர்கள் நிலம் மற்றும் ஏனைய வளங்களுக்காக போட்டியிடுகின்ற ஜொஸ் பகுதிக்கு அருகே இன வன்செயல்கள் நடக்கலாம் என்ற எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டதாக பாதுகாப்புப் படையினரை அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.


கூகிலை விமர்சிக்கும் சீனா
கணினி இணையத்தின் தேடல் நிறுவனமான கூகில் சேவையை, அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு கருவி என்று சீனாவின் அரசாங்க ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கூகில் அமெரிக்க உளவு நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதாகவும், தனது இணைய தேடல் இயந்திரத்தின் மூலம் சேகரிக்கும் தகவல்களை அது அவர்களுக்கு வழங்குவதாகவும், சீன அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்குவா கூறியுள்ளது.
சீன கலாச்சாரத்தின் மீது அமெரிக்க பெறுமானங்களையும், பார்வையையும் திணிப்பதன் மூலம், கூகிள் சீன கலாச்சாரத்தில் ஊடுருவ விளைவதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனாவில் இணைய தணிக்கை இருப்பதன் காரணமாக, அங்கிருந்து தான் வெளியேறுவதா, இல்லையா என்பது குறித்து கூகில் அறிவிக்கவிருக்கின்ற வேளையில் இந்த குற்றச்சாட்டுக்கள் வந்திருக்கின்றன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr