இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மகிந்த அரசாங்கம் கிழக்கில் சிங்கள ஆட்சியை நிறுவ முனைகிறது : சம்பந்தன் குற்றச்சாட்டு

JKR  வியாழன், 18 மார்ச், 2010

மகிந்த அரசாங்கம் கிழக்கு மாகாணத்தின் அனைத்து தமிழ் பிரதிநிதித்துவத்தையும் இல்லாது செய்து சிங்கள ஆட்சியை நிறுவ முயற்சிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் இந்த முயற்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு முறியடிக்கும் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தற்போது கிழக்கு மாகாணத்தில் தமிழ் அரசியல் பிரதி நிதித்துவம் குறைக்கப்பட்டு காணப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கிலேயே அதிக ஆசனங்களை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்திய மக்கள் சந்திப்புக்கு 500க்கும் 600க்கும் இடையிலான மக்களே வருகைத்தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடக்கில் ஏற்பட்டுள்ள புகழ் மங்களுக்கான அறிகுறியாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவுகள் மாத்திரம் இன்றி கூட்டமைப்பு முறையான தமது கொள்ளை வெளிப்பாட்டை காண்பிக்காமையும் இதற்கான காரணம் என கூறப்படுகிறது.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனியாக புலம்பெயர்ந்த மக்களை நம்பி செயற்படுவதாகவும் தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr