இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம்!

JKR  வெள்ளி, 19 மார்ச், 2010

கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளினால் நாம் இழந்தவற்றை இன்னும் இரு வருடங்களில் சீரமைத்துக் கொண்டு ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி எமது மக்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு நாம் தயாராக வேண்டும் என்றும் இதற்கு அனைத்து மக்களும் ஓரணி திரண்டு எம்மைப் பலப்படுத்த வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார்.

நேற்றைய தினம் (18) பாலையடி மற்றும் பாண்டியன்குளம் பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிய போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாலையடி மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் அவர்கள் அங்கு கூடியிருந்த பொதுமக்களைச் சந்தித்து அவர்களது குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டார். அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் பெரும்பாதிப்புகளுக்கு மத்தியில் விடுவிக்கப்பட்ட இப்பகுதியின் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
அத்துடன் பொதுமக்களின் தனித்தனியான பிரச்சினைகளையும் ஆராய்ந்து அவற்றுக்கு இன்னும் சில வாரங்களில் உரிய தீர்வுகள் எட்;டப்படும் என நம்பிக்கை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
நேற்று மாலை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாண்டியன் குளம் மகா வித்தியாலயத்தின் 2010ம் வருடத்திற்கான இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். அங்கு கூடியிருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் அவர்கள் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களது மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பில் தான் இனங்கண்டுள்ளதாகவும் இவற்றைப் படிப்படியாக வெகுவிரைவில் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார். மேலும் அப்பாடசாலையின் உடனடித் தேவைக்கென நூலகத்திற்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நிதி உதவியையும் குடிநீர் தேவைகளுக்காக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நிதியுதவியையும் வழங்கினார்.
இந்நிகழ்வுகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும் வேட்பாளருமான அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ் (கிருபன்) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான திரு. எம். சந்திரகுமார் (அசோக்) உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.







0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr