இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ராஜஸ்தானுக்கு முதல் வெற்றி

JKR  ஞாயிறு, 21 மார்ச், 2010



குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. இது ராஜஸ்தான் அணிக்கு முதல் வெற்றி ஆகும்.
இதன் மூலம் இந்த ஐபிஎல் போட்டியில் தனது முதல் வெற்றியை ராஜஸ்தான் பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 168ஓட்டங்களை எடுத்தது. கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட தீர்மானித்தது. முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் லம்ப் ஓட்டம் எதுவும் பெறாமல் வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய ஃபாசல், ஓஜாவுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். அடுத்து களம் இறங்கிய ஜுன்ஜுன்வாலா நிலைத்து நின்று சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். . யூசுப் பதான் 15 ஓட்டங்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா வீரர்களின் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற தீவிரம் தெரியவில்லை. விக்கெட்டுகள் கைவசம் இருந்தும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
முன்வரிசை ஆட்டக்காரர்கள் திவாரி (13 பந்துகளில் 11 ஓட்டங்கள் ), ஹாட்ஜ் (34 பந்துகளில் 36) புஜாரா 25 பந்துகளில் 29 ஓட்டங்கள் ) ஆகியோர் நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர்.
ஆட்டத்தின் இறுதியில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 134ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணி 4 போட்டிகளில் விளையாடி தலா 2 வெற்றி, தோல்வியைச் சந்தித்துள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr