இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஏழாவது நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு காலை 7.00 மணி முதல் நடைபெறுகிறது

JKR  வியாழன், 8 ஏப்ரல், 2010

ஏழாவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியிலுள்ள 11,102 வாக்களிப்பு நிலையங்களில் இன்று வியாழக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறுகிறது.
196 உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு நேரடியாகத் தெரிவுசெய்வதற்கு 22 தேர்தல் மாவட்டங்களிலும் 7,620 பேர் களத்தில் குதித்துள்ளனர். இவர்களைத் தெரிவு செய்வதற்காக ஒரு கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.
ஜனாதிபதி தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனநாயக தேசிய கூட்டணிக்கும் இடையில் தென்பகுதியில் மும்முனை போட்டி நிலவுகின்றது.
வடக்கு கிழக்கை பொறுத்தமட்டில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு இடையிலும் தமிழ் வேட்பாளர்களை பெருமளவில் களமிறக்கியுள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கிடையில் பல முனைகளிலும் போட்டிகள் நிலவுகின்றன.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பலமான நாடாளுமன்றத்தை அமைப்பதற்கான ஆணையை வழங்குமாறு கோரி நிற்பதுடன் ஐக்கிய தேசிய முன்னணி ஒரேயொரு பெரும்பான்மை ஆசனத்தை பெற்றுத் தருமாறு கோரி நிற்கின்றது. இந்நிலையில் ஜனநாயக தேசிய கூட்டணி தேசிய நல்லிணக்க அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணையை மக்களிடத்தில் எதிர்பார்த்து நிற்கின்றது.
கட்சிகளின் கோரிக்கைகள் ஒருபுறமிருக்க விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்வதில் ஒரே கட்சியை சேர்ந்த வேட்பாளர்களிடத்தில் கடும் போட்டிகள் நிலவுகின்றன. இதனால் பல மாவட்டங்களில் தேர்தல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று தேர்தல்கள் கண்காணிப்பு நிலையங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகஸ்தர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர். தேர்தல் பணிகளில் இம்முறை 1250 தனியார் பஸ்களும் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆறாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி நடைபெற்றது. அதன் முதலாவது கூட்டத்தொடர் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஆறுவருட பதவிக்காலம் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி நிறைவடையவிருக்கின்ற நிலையிலேயே நாடாளுமன்றம் 2010 பெப்ரவரி 9 ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டது.

இன்று நடைபெறுகின்ற வாக்களிப்பின் மூலமாக தெரிவாகும் உறுப்பினர்களை கொண்ட புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் மூன்றுவார காலத்திற்குள் ஆரம்பிக்கப்படவேண்டும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிபீடம் ஏறினால், அதன் கன்னிக் கூட்டத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேர்தல் கடமைகளில் அரச ஊழியர்கள் 3 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தலை விடவும் இம்முறை 50 ஆயிரம் பேர் கூடுதலாக சேவையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் ஏற்படுகின்ற நெருக்கடிகளை தவிர்த்துக்கொள்வதற்காக இந்தத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களை சேர்ந்த 7620 வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் திணைக்களத்தினால் விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
11875 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறும் அதேவேளை வாக்குகளை எண்ணுவதற்காக 1130 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக 48 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்தவர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக 55 பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வாக்களிப்பு இன்று மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்ததன் பின்னர் வாக்குப்பெட்டிகள் மிக பாதுகாப்பான முறையில் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும். அதன் பின்னர் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். கட்சிகளின் வாக்குகளை ஒரு குழுவினரும் விருப்பு வாக்குகளை மற்றொரு குழுவினரும் எண்ணவிருக்கின்றனர்.
தேர்தலின் முதலாவது பெறுபேற்றை நள்ளிரவுக்கு முன்னர் வெளியிட முடியும் என்றும் தபால் மூல வாக்குப்பதிவுகளே முதலில் எண்ணப்படும் என்றும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr