இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சென்னையில் தனது 87 வயது பாட்டி, ரசிகை கஸ்தூரியுடன் சச்சின்

JKR  புதன், 7 ஏப்ரல், 2010

சென்னையில் 87 வயது பெண் ரசிகரை நேற்றைய சந்தித்து ஆசி பெற்றுள்ளார் டெண்டுல்கர் . இன்று சென்னையில் நடக்க இருக்கும் ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணியில் ஆடுவதற்காக டெண்டுல்கர் சென்னை வந்துள்ளார். டெண்டுல்கர் கிரிக்கெட் ஆட வந்ததில் இருந்தே அவருடைய தீவிர ரசிகராக மாறிவிட்டவர் சரஸ்வதி. டெண்டுல்கர் விளையாடும் அனைத்து போட்டிகளையும் தவறாமல் பார்த்து விடுவார். டெண்டுல்கர் என்னென்ன சாதனைகள் செய்து இருக்கிறார். அவர் அடித்த சதங்கள் எத்தனை? போன்ற அத்தனை புள்ளி விவரங்களும் சரஸ்வதியின் விரல் நுனியில் வைத்துள்ளாராம் சரஸ்வதி. இது பற்றி பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை பார்க் ஷெரட்டன் ஹொட்டலில் தங்கியிருந்த டெண்டுல்கரை சந்திக்க சரஸ்வதி வந்தார். தனது அணி வீரர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்த டெண்டுல்கர் கூட்டம் முடிந்ததும் சரஸ்வதியை சந்தித்தார். சரஸ்வதியை பார்த்ததும் அவரது முன்பு கைகளை கட்டி மரியாதையுடன் நின்ற டெண்டுல்கர் என்னை ஆசீர்வதியுங்கள் என்று சரஸ்வதியிடம் கேட்ட அதேவேளை சரஸ்வதி நெற்றியை தொட்டு ஆசி வழங்கினார். உடனே டெண்டுல்கர் அவருடைய காலில் விழுந்து வணங்கினார்.
நீங்கள் எனது தீவிர ரசிகையாய் இருப்பதுடன் என்னை பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்து இருப்பதை பத்திரிகை செய்தி மூலமாக அறிந்து கொண்டேன். உங்களுடைய ஆசீர்வாதம் எப்போதும் எனக்கு தேவை என்றார் டெண்டுல்கார். அதற்கு சரஸ்வதி உங்களை சந்தித்ததன் மூலம் நான் அதிர்ஷ்டம் அடைந்துள்ளேன் என்று கூறினார். உடனே டெண்டுல்கர் இல்லை இல்லை உங்களை சந்தித்ததன் மூலம் நான்தான் அதிர்ஷ்டகாரனாகி இருக்கிறேன் என்றார். நீங்கள் சர்வதேச போட்டிகளில் 100 சதங்களை கடக்க வேண்டும் என்று சரஸ்வதி கூறினார். அதற்கு டெண்டுல்கர் நிச்சயம் சாதிப்பேன் என்றார்.
டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி மற்றும் குழந்தைகள் நலம் பற்றியும் சரஸ்வதி விசாரித்தார். அவர்கள் எல்லோரும் நன்றாக இருப்பதாக டெண்டுல்கர் கூறினார். பின்னர் சரஸ்வதி விநாயகர் சிலை ஒன்றை பரிசாக வழங்கினார். டெண்டுல்கரும், சக அணி வீரர்களும் கையொப்பமிட்ட பேட் ஒன்றை டெண்டுல்கர் சரஸ்வதியிடம் வழங்கினார். அப்போது சரஸ்வதி, டெண்டுல்கரை மிகவும் பாசத்துடன் நீங்கள் எனது 4ஆவது பேரன் என்று அழைத்தார். சரஸ்வதிக்கு 3 பேரன்கள் உள்ளனர். எனவே தெண்டுல்கரை 4ஆவது பேரன் என்றார்.
நீங்கள் உயரத்தில் குறைவாக இருந்தாலும் சாதிப்பதில் பெரிய ஆளாக இருக்கிறீர்கள் என்று சரஸ்வதி புகழ்ந்து கூறினார். சரஸ்வதியின் மகன் வெங்கடகிருஷ்ணன் கூறும் போது, எனது தாயாருக்கு உடல்நலம் குறைவாக இருந்த நேரங்களில் தெண்டுல்கர் ஆட்டத்தை பார்த்தால் உடனே உற்சாகமாகி விடுவார். அவரது உடலில் இருக்கும் வேதனை எல்லாம் குறைந்துவிடும். அவருக்கு தெண்டுல்கர் ஒரு டானிக் போல இருக்கிறார். கண்பார்வை மங்கிய போதிலும் தெண்டுல்கர் ஆட்டத்தை காண தவறுவது இல்லை என்றார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr