இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

காலாவதி மருந்து:​ சி.பி.ஐ.​ விசாரணைக்குத் தயார்- முதல்வர்

JKR  புதன், 7 ஏப்ரல், 2010

காலாவதி மருந்துகள் தொடர்பாக சி.பி.ஐ.​ விசாரணையை கேட்கவும் தயங்க மாட்டோம்'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
காலாவதியான மற்றும் போலி மருந்து தொடர்பாக,​​ சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.​ இந்தத் தீர்மானத்தின் மீது சேகர்பாபு ​(அதிமுக),​​ பீட்டர் அல்போன்ஸ் ​(காங்கிரஸ்),​​ வேல்முருகன் ​(பாமக),​​ நன்மாறன் ​(மார்க்சிஸ்ட்),​​ குணசேகரன் ​(இந்திய கம்யூனிஸ்ட்),​​ சதன் திருமலைக் குமார் ​(மதிமுக),​​ ரவிக்குமார் ​(விடுதலைச் சிறுத்தைகள்)​ ஆகியோர் பேசினர்.


இதற்கு,​​ முதல்வர் கருணாநிதி அளித்த பதில்:

போலி மருந்து தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஒரு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
ஆனால்,​​ அதற்கு முன்பு போலி மருந்து அதிலும் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்று பார்த்தால்,​​ ஒரு கேலிக்கூத்தாக இருந்திருக்கின்றன.
அபராதமும்,​​ தண்டனையும்:​​ ஒரு குற்றத்தில் முக்கிய குற்றவாளி மீனாட்சிசுந்தரம் மீது மருந்துக் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி மூன்று வழக்குகள் தொடரப்பட்டன.
இதற்கு,​​ ரூ.7 ஆயிரம் அபராதமும்,​​ நீதிமன்றம் கலையும் வரையில் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.​ நீதிமன்றம் கலையும் வரை என்றால்,​​ அந்தத் தண்டனையை யார் வேண்டுமானாலும் சுலபமாக ஏற்றுக் கொள்வார்கள்.
இந்த நிலையில்,​​ மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.​ போலி மருந்து தயாரிப்பவர்கள் மீது 10 ஆண்டுகள் முதல் ஆயுள் வரையிலான சிறைத் தண்டனை வழங்கவும்,​​ குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கொஞ்சம் பரவாயில்லை:​​ போலி மற்றும் காலாவதியான மருந்து பிரச்னையை இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.​ போலி மருந்து தயாரிப்பது ஒரு வகை.​ காலாவதியான மருந்தை விற்பது மற்றொரு வகை.​ போலி மருந்து தயாரித்தால் அது உயிருக்கே ஆபத்து.​ காலாவதியான மருந்தை விற்பனை செய்தால் அது எந்த வியாதியையும் குணப்படுத்தாது.​ காலாவதியான மருந்து,​​ சத்தில்லாத,​​ சாரமில்லாத,​​ எந்த விளைவுகளும் இல்லாத மருந்தாகி விடுகிறது.
ஆனால்,​​ போலி மருந்து}எதையோ போட்டு மருந்து என்று ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தால் அது சமயத்தில் விஷமாகக் கூட ஆகி விடுகிறது.
ஆகவே,​​ பொய் மருந்தாக,​​ போலி மருந்தாக,​​ விஷ மருந்தாக வருகின்ற அந்த மருந்தை விட,​​ காலாவதியான மருந்துகள் கொஞ்சம் பரவாயில்லை என்றே எண்ண வேண்டும்.
இப்போது காலாவதியான மருந்துகளால்தான் மாநிலத்திலே பிரச்னை ஆரம்பமாகியது.​ இதுதொடர்பாக,​​ அதிகாரிகளை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.​ மத்திய அரசின் சட்ட திருத்தத்தால்,​​ மருந்து வியாபாரிகள் அச்சத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
சிபிஐ விசாரணைக்கும் தயார்:​​ மருந்துகளை அருந்தி மக்கள் சாகிறார்கள் என்பது சாதாரணமான விஷயமல்ல.​ அதை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.
காலாவதியான மருந்துகள் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் மாற்றப்பட்டுள்ளது.​ நாட்டிலே பல மாநிலங்களில் இது நடைபெறுகின்றது எனத் தெரிய வருமேயானால் மத்தியில் உள்ள சி.பி.ஐ.​ விசாரணையைக் கேட்கவும் தயங்க மாட்டோம்'' என்றார் கருணாநிதி.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr