இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க பொலிஸ் திணைக்கள அடையாள அட்டையை பயன்படுத்தலாம்:யாழ்.அரச அதிபர்

JKR  ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

பொலிஸ் திணைக்களம் வழங்கிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி இடம்பெயர்ந்த மக்கள் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 127 ஆம் பிரிவின் கீழ் வாக்காளர்கள் வேறொரு வர்ககளிப்பு நிலையத்திலும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடாபாக அரச அதிபர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்காளர் ஒருவர் வாக்கெடுப்பு நிலையத்தில் தனது ஆள் அடையாளத்தை நிரூபிப்பதற்கு எட்டு வகையான அடையாள அட்டைகளில் எவையேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க முடியும்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டை ஒன்றையேனும் வைத்திருக்காத நலன்புரி நிலையத்தில் தற்காலிமாக வசித்த வாக்களார் ஒருவர் நலன்புரி நிலையத்தில் ஆள் அடையாளத்தை நிரூபிப்பதற்காக பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையைச் சமர்ப்பித்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சமர்ப்பிக்கப்படும் அடையாள அட்டை 2009.02.15 – 2009.12.19 திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் வழங்கப்பட்டதாகவும், இலக்கம் 150,000 – 238,326 இற்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr