இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அமெரிக்காவில் அணு ஆயுதம் குறைக்கப்படும் : ஒபாமா உறுதி

JKR  வியாழன், 8 ஏப்ரல், 2010



அமெரிக்காவில் அணு ஆயுதங்கள் நிச்சயம் குறைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதியளித்துள்ளார்.
அது மட்டுமல்ல, மோதல் வந்தாலும் அமெரிக்கா முதலில் எதிரி நாடுகள் மீது அணு ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தாது என்றும் அவர் கூறினார்.
முன்பு இருந்த ஆட்சிகள், அணு ஆயுதம் இல்லாத, ஆனால், ரசாயனம் அல்லது உயிரி ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தும் என்பதில் கண்டிப்பாக இருந்தன.

ஆனால், அமெரிக்கா தற்போது அணு ஆயுதக் குறைப்பில் அதிக அக்கறை காட்ட முன்வந்திருக்கிறது. அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து தங்களது அணு ஆயுதங்களில் 30 சதவீதத்தைக் குறைப்பது என்ற முக்கிய முடிவை சமீபத்தில் எடுத்தன.
இது குறித்து, 'நியூயோர்க் டைம்ஸ்' இதழுக்கு அதிபர் ஒபாமா தெரிவிக்கையில்,
"அணு ஆயுதம் இல்லாத நாடுகள் மீது மோதல் வந்தாலும், அணு ஆயுதத் தாக்குதல் நடத்த மாட்டோம். அணு ஆயுதங்கள் பாதுகாப்பு அவசியம் என்றாலும் அணு ஆயுதக் குறைப்பு என்பது திட்டப்படி பின்பற்றப்படும். ஆனால், சர்வதேச நடைமுறைகளின்படி, அணு ஆயுதப் பரவல் தடையைப் பின்பற்றும் நாடுகள் மீதான தாக்குதலுக்கு வாய்ப்பில்லை.
ஆனால், ஈரான், வடகொரியா விஷயத்தில் இந்த நடைமுறை பொருந்தாது.பொதுவாக மோதல் வந்தாலும், எவ்விதமான அணுகுமுறை மேற்கொண்டால், அணு ஆயுதத் தேவை இருக்காது என்ற அடிப்படைகள் பின்பற்றப்படும்.
இதன் மூலம் அணு ஆயுதக் குறைப்பு என்ற அடிப்படைத் திட்டத்தை நோக்கி நாம் செல்ல முடியும். அதே சமயம், அமெரிக்க மக்கள் பாதுகாப்பாக வாழத் தேவையான அணு ஆயுதங்கள் கையிருப்பில் இருக்கும்" என்றார்.

ரஷ்யா கண்டிப்பு
அதே வேளை, அமெரிக்க நவீன ஏவுகணைத் திட்டம் இன்றுள்ள ஆயுத கையிருப்பைப் பாதிக்கும் வகையில் அமைந்தால், அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் என்று ரஷ்யா கூறியிருக்கிறது.
நேற்று செக் நாட்டின் தலைநகரான பிரேக் நகரில் ரஷ்ய அதிபர் மெட்வதேவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அணு ஆயுதக் குறைப்பு குறித்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
இந்தச் சமயத்தில் ரஷ்ய அமைச்சர் லாவ் ரோவ், மொஸ்கோவில் அளித்த பேட்டியில்,
"ரஷ்யா அணு ஆயுத பலத்தைக் குறைத்து அமெரிக்க பலம் அதிகரிக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டால், நாங்கள் கையெழுத்தை வாபஸ் பெற வேண்டி வரும்" என்று எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr