இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தொடர்ந்து இந்தியாவில் விளையாட விரும்பினால் – சானியாவுக்கு சிவசேனா எச்சரிக்கை

JKR  புதன், 7 ஏப்ரல், 2010

மும்பை: இந்தியர் ஒருவரையே சானியா மிர்ஸா கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா கூறியுள்ளது.
சமீப காலமாக ஷாருக்கான் உள்ளிட் பிரபலங்களைக் குறி வைத்து விமர்சித்துக் கொண்டிருந்த சிவசேனா தற்போது சானியா மிர்ஸா மீது கவனத்தைத் திருப்பியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர் சோயப் மாலிக்கைத் திருமணம் செய்யவுள்ள சானியா மிர்ஸாவுக்கு அது கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ள தலையங்கம்...
இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என சானியா மிர்ஸா விரும்பினால் அவர் ஒரு இந்தியரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
எப்போது பாகிஸ்தானியர் ஒருவரை கல்யாணம் செய்து கொள்ள மனதார சானியா முடிவு செய்து விட்டாரோ, அப்போதே அவர் இந்தியர் இல்லை என்றாகி விட்டது. தன்னை இந்தியராக அவர் நினைத்திருந்தால் நிச்சயம் ஒரு பாகிஸ்தானியரை திருமணம் செய்ய முடிவெடுத்திருக்க மாட்டார்.
இந்தியராக நீடிக்க வேண்டும் என்றால், இந்தியாவின் பிரதிநிதியாக விளையாட வேண்டும் என்றால், அவர் நிச்சயம் ஒரு இந்தியரைத்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்.
கல்யாணத்திற்குப் பின்னர் நிச்சயம் அவர் தனது மாமனார், மாமியார் வீட்டுக்குத்தான் போகப் போகிறார். பிறகு எப்படி அவரால் இந்தியாவுக்காக விளையாட முடியும்? அது இந்த நாட்டின் புனித்த்திற்குக் கேடானதாகவும் அமையும், சட்டப்படியும் அது பொருந்தாத ஒன்றாகும்.
கல்யாணத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் பிரஜையாகி விடுவார் சானியா. பாகிஸ்தான் குடியுரிமையை வைத்துக் கொண்டு சானியாவால் எப்படி இந்தியாவுக்காக விளையாட முடியும்? அவர் இஷ்டத்திற்கு விளையாட இந்த நாடு என்ன டென்னிஸ் பந்தா?
சானியா பாகிஸ்தானுக்காக டென்னிஸ் ஆட வேண்டும் என்று அந்த நாட்டு டென்னிஸ் சங்கத் தலைவர் திலாவர் அப்பாஸ் அழைத்துள்ளார். ஆனால் இந்தியாவுக்காக டென்னிஸ் ஆட சானியா விரும்பினால், அவர் ஒரு இந்தியரைத்தான் தனது வாழ்க்கைத் துணைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே, சிவசேனாவின் சட்டப் பிரிவு தலைவர் ராகுல் நர்வர்கர் கூறுகையில், ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பறித்து விட்டு கல்யாணம் செய்யத் தயாராகியுள்ளார் சானியா மிர்ஸா. இது தார்மீக ரீதியில் மிகவும் தவறானதாகும். ஒரு பக்கம் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்று பிரசாரம் செய்கிறார் சானியா. ஆனால் மறுபக்கம் இந்த நாட்டின் பெண் ஒருவரின் கண்ணீரை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நாட்டு மக்கள் சானியாவின் சாதனைகளுக்காக மகிழ்ச்சி தெரிவித்தனர், ஆதரவு தெரிவித்தனர். அவருக்குத் துணை நின்றனர். ஆனால் அவர்களுடைய உணர்வுகள், இந்த நாட்டின் உணர்வுகள், மதிப்பீடுகளை மதிக்கத் தவறி விட்டார் சானியா என்று கூறியுளார் நர்வர்கர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr