இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இரகசிய வாக்களிப்பு கண்காணிக்கப்பட இருப்பதாக பொய்ப் பிரசாரம் : நம்ப வேண்டாம் என்கிறார் மனோ கணேசன்

JKR  செவ்வாய், 6 ஏப்ரல், 2010

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் வாக்குச் சாவடிகளில் கமரா கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கின்றார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும் என்பதாக பொய்ப்பிரசாரத்தை சில தரப்பினர் முன்னெடுத்து வருகிறார்கள். இவை முற்று முழுதான மோசடி பிரசாரங்களாகும் என மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்திலே தோட்டத் தொழிலாளர்கள் செறிந்துவாழும் நாவலப்பிட்டிய, கம்பளை, கலஹா தோட்டப் பகுதிகளில் இத்தகைய முறையில் கருத்துக்களைப் பரப்பும் கைங்கரியங்களில் சில ஏமாற்றுப் பேர்வளிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இவை முற்று முழுதான மோசடி பிரசாரங்களாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இரகசிய வாக்களிப்பு தொடர்பிலே கருத்து தெரிவித்துள்ள மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
வாக்களிப்பு நிலையங்களில் எந்தவிதமான கமரா கருவிகளும் பொருத்தப்பட முடியாது. மேலும் இரகசிய வாக்களிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் விரும்பிய சின்னத்திற்கும், வேட்பாளரின் இலக்கத்திற்கும் சுதந்திரமாக வாக்களிக்கலாம்.
அதேபோல் கடந்தகாலங்களில் வன்முறை சர்ச்சைக்குரியதாக இருந்த வாக்குச் சாவடிகளையும், அத்தகைய வாக்குச் சாவடிகளை சென்றடையும் பாதைகளையும் பாதுகாக்கும் கடமையில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவை தொடர்பிலான முடிவுகள் இன்று (06-04-2010) தேர்தல் ஆணையாளருடன் எதிர்க்கட்சிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது எடுக்கப்பட்டன.
எனவே கண்டி மாவட்ட தமிழ் வாக்காளர்களையும், குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களையும் எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாக சென்று வாக்களிக்கும்படி கோருகின்றேன்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr