இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அரசின் தேர்தல் களத்தில் விளையாட்டு வீரர்கள் - நடிகர்கள்! : விக்ரமபாகு கருணாரட்ன _

JKR  சனி, 3 ஏப்ரல், 2010

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் விளையாட்டு வீரர்களையும் நடிகர்களையும் களம் இறக்கி மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது. யுத்த போதையை மக்களுக்கு ஊட்டி அரசியல் நடத்திய ஆட்சியாளர் இன்று கேளிக்கை நிகழ்வை மேடையேற்றுகின்றனர் என இடது சாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
நேற்று காக்கைத் தீவு பகுதியில் பெருமாள் பூமிநாதன் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே விக்கிரமபாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

"நாவலப்பிட்டியில் நடைபெற்ற எமது கூட்டத்தை பொலிஸார் தடுத்தனர். "எதற்காக இங்ஙனம் செயற்படுகிறீர்கள்?" எனக் கேட்ட போது, "இவ்வாறு செயற்படாவிட்டால் எமது பதவி பறிபோய் விடும்" என்று அவர்கள் கூறுகின்றனர்.
நாவலப்பிட்டிப் பிரதேசம் இன்று மஹிந்தானந்த அலுத்தகமகேவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் விளையாட்டு வீரர்களையும் நடிகர்களையும் களம் இறக்கி மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது. யுத்த போதையை மக்களுக்கு ஊட்டி அரசியல் நடத்திய ஆட்சியாளர், இன்று கேளிக்கை நிகழ்வை மேடையேற்றுகின்றனர்.
ஏகாதிபத்திய விரோத நடிப்புக்கள் இன்று மேடையேற்றப்படுகின்றன. தேசத்தின் பஞ்சாயத்து, குமார என வர்ணிக்கப்படும் விமல் வீரவன்சவின் ஆடையைக் களைந்தால், உள்ளே அமெரிக்க உள்ளாடை இருப்பதைக் காணலாம்.
தேர்தல் முடிந்தவுடன் மஹிந்த அரசாங்கம் சரணாகதி அரசியலுக்குச் சென்று விடும்.
இடதுசாரிகள் பலமாக இருந்த காலப்பகுதியில் இந்த நாட்டில் தேசிய ஐக்கியம் நிலவியது. இன்று அது இல்லை.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்று இந்திய ஆதிக்க சக்திகளின் சதிக்குள் சிக்கிக் கிடக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மீள முடியாதவாறு அதனுள் சிக்கிக் கொண்டுள்ளது. அதனால் தான் கூட்டமைப்பில் இன்று சிதைவு ஏற்பட்டிருக்கின்றது.
40 வருட காலமாகத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடிவரும் எமக்கு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல சகல தகுதியும் உண்டு" என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr