இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஓ.பி, செங்கோட்டையன், தம்பித்துரையுடன் சிறுதாவூர் பங்களாவில் ஜெ. ஆலோசனை

JKR  ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு சர்ச்சைக்குரிய சிறுதாவூர் பங்களாவுக்கு ஜெயலலிதா [^] இன்று திடீர் விஜயம் செய்தார். அங்கு ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், தம்பித்துரை ஆகியோருடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை அருகே திருப்போரூரில் இருந்து 4 கிமீ தொலைவில் மாமல்லபுரம் சாலையில் சிறுதாவூர் உள்ளது. இங்குள்ள சொகுசு பங்களாவில் அதிமுக [^] பொதுச்செயலாளர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுப்பது வழக்கம்.
கடந்த 1968ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்தபோது, காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதி, பங்களா வளாகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் [^] கூறப்பட்டு வந்தது.
ஆனால் இந்த பங்களா தனக்கு சொந்தமானது இல்லை என ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டில் இவ்விவகாரம் வலுவடைந்த நிலையில் தமிழக அரசு சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம் தலைமையிலான ஒரு நபர் குழு விசாரணை ஆணையம், உச்சநீதிமன்ற ஒப்புதலுடன் விசாரணை செய்து கடந்த மார்ச் மாதம் தமிழக அரசிடம் அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது.
விசாரணை அறிக்கையின் அம்சங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுதாவூர் பங்களாவுக்கு செல்வதை தவிர்த்து வந்த ஜெயலலிதா இன்று திடீரென சிறுதாவூர் பங்களாவுக்கு விஜயம் செய்தார்.
இன்னொரு தனிக் காரில் ஓ.பன்னீர் செல்வம், தம்பித்துரை, கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரும் சிறுதாவூர் பங்களாவுக்கு விரைந்தனர். அங்கு இடைத் தேர்தல் தோல்வி, சட்டசபை பட்ஜெட் விவாதம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார் ஜெயல்லிதா.
பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுக வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது. டெபாசிட்டையும் இழந்தது. இது அதிமுகவினரை சிதறடித்துள்ளது. இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாத ஈரோடு மாவட்டத் தொண்டர் தங்கவேலு தீக்குளித்து விட்டார்.
இது ஜெயல்லிதாவை உலுக்கி விட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக ஈரோடு சென்று தங்கவேலுவைப் பார்த்து ஆறுதல் கூறினார். இந்தப் பின்னணியில்தான், சிறுதாவூர் பங்களாவுக்கு ஜெயலலிதா சென்று அங்கு வைத்து ஆலோசனை நடத்தியுள்ளார் ஜெயல்லிதா.
ராசிக்காக முன்பெல்லாம் முக்கியப் பிரச்சினை என்றால் சிறுதாவூர் பங்களாவில் வைத்த்தான் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார் ஜெயல்லிதா. ஆனால் கொடநாடு பங்களாவுக்கு மாறிய பின்னர் தொடர்ந்து அவர் சரிவையே சந்தித்த வருவதால் ராசிக்காக சிறுதாவூர் பங்களாவை இந்த முறை ஆலோசனை நடத்த அவர் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr