இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ்ப்பாணத்தில் கொள்ளையர் குழுவால் தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில் மரணம்

JKR  புதன், 30 மார்ச், 2011

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்றுக்காலை யாழ். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமானார்.

கொழும்பு15 முகத்துவாரத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு பரிதாப மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
இவர் யாழ். கோண்டாவில் கிழக்கு, கோட்டைக் காட்டு ஒழுங்கையிலுள்ள தனது உறவினர் வீடொன்றில் தங்கியிருந்த போது கடந்த சனிக்கிழமை கொள்ளைக் கும்பலொன்றினால் பலமாகத் தாக்கப்பட்ட நிலையில் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததார். கடந்த சனிக்கிழமை அதிகாலை அவரது உறவினர் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர் கும்பல் அங்கிருந்த குறித்தநபரை பலமாகத்தாக்கி விட்டு அவர் வசம் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பிச் சென்றிருந்தது.
அதன் பின் அவர் மருத்துவசிகிச்சைக்கு உட்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr