இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தருமபுரம் மகாவித்தியாலயம் 400 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் - ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.

JKR  செவ்வாய், 13 மார்ச், 2012


கி ளிநொச்சி தருமபுரம் மகாவித்தியாலயம் ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் விரைவில் முதற்கட்டமாக 400 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படும் என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்று (12) கிளி தருமபுரம் மகாவித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தொரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரரிவிக்கையில் ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ் இந்த மாவட்டத்தில் பல பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளது. அந்;த வகையில் இந்தப் பிரதேசத்தில் இந்த பாடசாலை முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் மிக விரைவில் முன்னெடுக்கப்படும். பிரதேசத்தின் முக்கியமான பாடசாலையாக தருமபுரம் மகாவித்தியாலயம் விளங்குவதால் இதன் பௌதீக வளத் தேவைகள் இயன்றவரை விரைவாக நிறைவு செய்யப்பட்டு நிறைவான கல்விச் செயற்பாட்டிற்கு வழிவகுக்கப்படும் எனத் தெரிவித்தார். ஆயிரம் பாடசாவைகள் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டிருந்தாலும் அதற்கப்பால் இந்த பாடசாலைக்கு இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றையும் அமைத்துக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எம்மால் நிச்சயம் மேற்கொள்ளப்படும். மேலும் கிளிநொச்சி வலயக்கல்வித் திணைக்களத்திற்கு இம்மாதம் கிடைக்கவுள்ள ஆசிரியர் வளங்கள் இந்தப் பாடசாலைக்கும் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். எல்லோரும் குறிப்பிடுவது போன்று தருமபுரம் மகாவித்தியாலயம் ஒரு சமூக பாடசாலை என்பது இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சமூகம் பாடசாலையின் செயற்பாடுகளிலும் வளர்ச்சியிலும் காட்டுகின்ற அக்கறையும் பங்கெடுத்துக் கொள்கின்ற தன்மையும் பாராட்டுதலுக்குரியது. அது இந்த பாடசாலையின் எதிர்கால வெற்றியை பறைசாற்றி நிற்கிறது. அத்தோடு உழைக்கும் மக்கள் சமூகத்தை கொண்டுள்ளமை இந்த பிரதேசத்தின் சிறப்பம்சமாகும் எனவும் தெரிவித்தார். மேலும் தருமபுரம் பிரதேசத்தை மையமாக வைத்தே கண்டாவளைப் பிரதேசத்தின் அனைத்து நிர்வாக செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் தர்மபுரம் அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி நிறைந்த பிரதேசமாகக் காணப்படும். இவ்வாறான பிரதேசங்களின் அபிவிருத்தி பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றமைக்கு கடந்த கால யுத்தத்தை மட்டும் காரணங்காட்டி விட முடியாது. அதற்கப்பால் கடந்த காலத்தில் இந்தப் பிரதேசங்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டமையும் ஒரு காரணம். எனவே அபிவிருத்தியில் கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்ட பிரதேசங்களையே நாம் முன்னுரிமைப்படுத்தி அபிவிருத்தி செய்யப்படும். அந்தவகையில் தருமபுரம் பிரதேசமும் எமது கவனத்தை ஈர்த்துள்ளது. அத்தோடு எம்மால் உறுதியளிக்கப்பட்டமைக்கு அமைவாக கல்மடுக்குளத்தின் கீழான நிர்ப்பாசனம் தருமபுரம் புளியம்பொக்கணைக் கிராமத்திற்கும் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் அறிவித்துள்ளார். எனவே இந்த பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கடந்த காலத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்த இந்தப் பாடசாலை எதிர்காலத்திலும் மேலும் பல சாதனைகளைப் படைக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். பாடசாலை முதல்வர் பூலோகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் திரு. முருகவேல் ஓய்வுபெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. குருகுலராசா கிளிநொச்சி மாவட்ட செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் திரு. கேதீஸ்வரன் கண்டாவளைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. இராஜகுலசிங்கம் ஈ.பி.டி.பியின். கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் திரு. தவநாதன் மற்றும் கிராமசேவையாளர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் பழைய மாணவர்கள் அயற்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.





























0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr