இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வேண்டும்: யசூஷி அகாஸி

JKR  சனி, 10 மார்ச், 2012


ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளை முழுமையாக அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் அவசியத்தை இலங்கைக்கான ஜப்பானிய அரசின் விசேட பிரதிநிதியான யசூஷி அகாஷி வலியுறுத்தியுள்ளார்.
ஜப்பான், இலங்கை ஆகிய இருநாடுகளுக்கிடையிலான வலுவான இருதரப்பு உறவுகளின்முக்கியத்துவத்தையும் அகாஷி வலியுறுத்தியதுடன், இலங்கைக்கு எப்போதும் ஆதரவளிக்கும் எனவும் எப்போது உதவி தேவைப்பட்டாலும் வழங்கும் எனவும் அகாஷி வலியுறுத்தியதாக கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலின்போது அகாஷி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டின் முன்னேற்றம் மற்றம் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் துரித அபிவிருத்திகள் குறித்து அகாஷிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கினார். வெளிநாட்டு, நிதியுதவிகள், கடன்களில் 70 சதவீதம் ஏற்கெனவே இப்பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr