ச ட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இலங்கை கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அமெரிக்கா அறிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் கருத்துச் சுதந்திரம் போன்றன தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.ஊடக நிறுவனங்கள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பிரதிப் பேச்சாளர் பெற்றிக் வென்ட்ரல் தெரிவித்துள்ளார். கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். உதயன் பத்திரிகை மீதான தாக்குதல், பி.பி.சீ தமிழ்சேவை முடக்கம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். -->




0 கருத்துகள்:
கருத்துரையிடுக