இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பேச்சில் மட்டுமன்றி செயற்பாடுகளிலும் திறமையானவர்களை நாடாளுமன்றிற்கு அனுப்பவும் : ஜனாதிபதி

JKR  வெள்ளி, 26 மார்ச், 2010



வெறும் பேச்சில் மட்டுமன்றி செயற்பாடுகளிலும் திறமையானவர்களை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு தொடர்பான உணர்வுடைய திறமையானவர்களுடன் கடமையாற்றவே தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெலிமட கெப்பிட்டிபொல மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களின் ஒத்துழைப்பு சரியான முறையில் கிடைத்திருக்காவிட்டால் பயங்கரவாதத்தை இல்லதொழித்திருக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.
குடும்ப அரசியல் தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பம் என்றால் தாய், தந்தை மற்றும் சகோதரர்களிடையே ஒற்றுமை காணப்பட வேண்டியது அவசியம் எனவும் நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளில் தமது சகோதரர்கள் பெரும் ஆதரவினை வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr