இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வடக்கு கிழக்கு எமது சொந்த தாயகம் என்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்- கிளிநொச்சியில் புளொட் சித்தார்த்தன்!

JKR  வெள்ளி, 26 மார்ச், 2010

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க நாம் அனைவரும் விட்டு கொடுப்புடன் ஒன்றுபட்டு செயற்படுவதற்கான மனோநிலை உருவாகவேண்டும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கிளிநொச்சியில் உள்ள புளொட் அலுவலகத்தில் இடம்பெற்ற பொதுமக்களுடனான கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தின்போது மிகப்பெரும் பேரழிவுகளை எதிர்கொண்ட எமது மக்களின் வாழ்வில் புதியதோர் மாற்றத்தை உருவாக்கவேண்டும். ஆதற்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் நாம் தொடர்ந்து உறுதியாகவுள்ளோம். இடம்பெயர்ந்த எமது மக்கள் அவர்களின் சொந்த வாழ்விடங்களில் மீண்டும் மீள்குடியேற்றப்படுவது மட்டுமன்றி, அச்சமின்றி வாழ்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.
இதெல்லாவற்றிற்கும் அப்பால் தமிழர் தாயக பிரதேசமான வடக்கு, கிழக்கில் ஜனநாயக சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் எனவும், தமிழர் தாயக பிரதேசமான வடக்கு, கிழக்கு எமது சொந்த தாயகம் என்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr