இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இந்திய "ரோ" அமைப்பு ஜனாதிபதிக்கு எதிராக செயற்படவில்லை: இந்தியா

JKR  செவ்வாய், 9 மார்ச், 2010

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ரோ எனப்படும் இந்திய வெளிதொடர்பு புலனாய்வுத் துறையினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்பட்டதாக கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் தோல்வி அடைவதற்கு ஏதுவாக அவர்கள் செயற்பட்டதாக தபால் துறை அமைச்சர் நந்தன குணதிலக குற்றம் சுமத்தியுள்ளார்..

ரோ எனப்படும், இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் ஒப்புநோக்கு கண்காணிப்பகம், மற்றும், வெளித்தொடர்பு புலனாய்வு அமைப்பு என்பன ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இலஙகைக்கு, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதியை சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் முன்னிலையில் நந்தன குணதிலக இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எனினும் நிருபமா ராவ் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இந்திய ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ரோ போன்ற இந்தியாவின் எந்த நிறுவனமும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக செயல்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டதாக கூறப்படுவது பொய்யான தகவல் எனவும், இந்தியா எந்த ஒருநாட்டினதும் உள்விவகாரங்களில் தலையிடப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr