வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

நிருபமா ராவுக்கு ஸ்ரீ சித்திரை திருநாள் விருது: அறக்கட்டளை அறிவிப்பு
JKR புதன், 3 ஆகஸ்ட், 2011
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
நிருபமா ராவ்
இடுகையிட்டது
Unknown
நேரம்
1:09 PM
0
கருத்துகள்
இந்திய "ரோ" அமைப்பு ஜனாதிபதிக்கு எதிராக செயற்படவில்லை: இந்தியா
JKR செவ்வாய், 9 மார்ச், 2010
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ரோ எனப்படும் இந்திய வெளிதொடர்பு புலனாய்வுத் துறையினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்பட்டதாக கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் தோல்வி அடைவதற்கு ஏதுவாக அவர்கள் செயற்பட்டதாக தபால் துறை அமைச்சர் நந்தன குணதிலக குற்றம் சுமத்தியுள்ளார்.. | ரோ எனப்படும், இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் ஒப்புநோக்கு கண்காணிப்பகம், மற்றும், வெளித்தொடர்பு புலனாய்வு அமைப்பு என்பன ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். |
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
நிருபமா ராவ்
இடுகையிட்டது
Unknown
நேரம்
9:03 PM
0
கருத்துகள்
நிருபமா ராவ் த.தே.கூட்டமைப்புடன் சந்திப்பு
JKR சனி, 6 மார்ச், 2010

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து கொழும்பு ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இச்சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து கலந்துரையாடவிருப்பதாக கூறியுள்ளார்.
இலங்கையின் முன்னாள் இந்தியத் தூதுவரான நிருபமா ராவ், அந்நாட்டு வெளிநாட்டமைச்சின் செயலாளராக பதவியேற்ற பின் கொழும்புக்கு முதல் தடவையாக விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
நிருபமா ராவ்
இடுகையிட்டது
Unknown
நேரம்
6:32 AM
0
கருத்துகள்
நிருபமா ராவ் நாளை பேராதனைக்கு விஜயம்
JKR

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் நாளை 7ஆம் திகதி பேராதனை ஆங்கில கல்வியியற் கல்லூரிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கைக்கு இருநாள் குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இவர், முன்னாள் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராவார்.
இந்தியா - இலங்கை இடையே ஆங்கில உயர் கல்வி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் அவர் அங்கு பங்கு கொள்ளவுள்ளதாக கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எச்.எச்.ஆரியதாச தெரிவித்தார்.
இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளி விவகார அமைச்சர் ரோகித போகொல்லகம, கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இச்சந்திப்பு ஞாயிறு காலை 8.00 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இச்சந்திப்பு ஆங்கிலக் கல்வித்துறையில் முன்னேற்றகரமான நடவடிக்கை ஒன்றுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாமென அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
நிருபமா ராவ்
இடுகையிட்டது
Unknown
நேரம்
6:04 AM
0
கருத்துகள்
இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா கொழும்புக்கு முக்கிய விஜயம்
JKR புதன், 3 மார்ச், 2010

இலங்கையின் முன்னாள் இந்திய தூதுவரும், தற்போதைய இந்தியாவின் வெளியுறவுச் செயலாளருமான நிருபமா ராவ் அம்மையார் இரண்டு நாள் விஜயமாக நாளை மறுதினம் சனிக்கிழமை கொழும்பு வருகின்றார். இந்தியாவின் வெளியுறவுச் செயலர் பதவியை ஏற்றபின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
இலங்கையில் பொதுத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள இந்தச் சமயத்தில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்வதால் அவரது இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை அதிகாரப் பரவலாக்கல் யோசனைத் திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு கொழும்புக்கு புதுடில்லி அழுத்தம் கொடுத்து வருகையில், இந்தியத் தூதுவரின் கொழும்பு வருகை இடம்பெறுகின்றமை மிகவும் முக்கியமானதாகும்.
இந்திய வெளிவிவகாரச் செயலரின் இலங்கை வருகை வழமையான இரு தரப்பு பரஸ்பர நலன் நோக்கிய உறவாடல் தொடர்பானதே என அதிகாரிகள் மட்டத்தில் கூறப்பட்டது.
எனினும், இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தீர்க்கமான சில கொள்கை முடிவுகள் குறித்து கொழும்பு, இந்தப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் கோடிகாட்ட வேண்டும் எனப் புதுடில்லி கருதுவதாகவும் புதுடில்லியின் அந்த நிலைப்பாட்டை நிருபமா ராவ் தனது கொழும்பு விஜயத் தின் போது இங்குள்ள அதிகார வர்க்கத்திடம் அழுத்தம், திருத்தமாகத் தெரியப்படுத்துவார் எனவும் இந்தியத் தரப்புச் செய்திகள் சில தகவல் வெளியிட்டன.
அவரது இலங்கை விஜயத்தையொட்டி இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அவரின் விஜயம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் இன்று இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Share this:
|Digg |
Twitter |
Technorati |
Del.icio.us |
StumbleUpon |
Facebook |
லேபிள்கள்:
நிருபமா ராவ்
இடுகையிட்டது
Unknown
நேரம்
8:25 PM
0
கருத்துகள்
jkr jkr





















