இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

முஸ்லிம் காங்கிரஸிற்குல் மீண்டும் பிளவு?ஹசன் அலி மறுப்பு

JKR  சனி, 8 மே, 2010


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு பிரிந்து அரசுடன் இணைந்து கொள்ளவுள்ளர்கள் என்றும் இதற்கான முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றது என்று வாராந்த பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலியிடம் இணையதளம் சற்று முன் தொடர்பு கொண்டு வினவியது.
இவ்வாரான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும், எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணையவுள்ளார்கள் என்ற செய்தியை மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு சில பத்திரிகைகள் அரசுடன் சேர்ந்து கொண்டு எமது கட்சிக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சியை விட்டு பிரிந்து செல்லமாட்டோம் என்று மக்கள் மத்தியில் வாக்குறுதியளித்துள்ளனர். அவ்வாறு நாங்கள் அரசுடன் சேர்வதாக இருந்தால் தாங்கள் அனைவரும் கட்சித் தலைவருடன் தான் ஒன்று சேர்வது என்று உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாகவும் ஹசன் அலி தெரிவித்தார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr