இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள தமிழ் மாணவர்களிடையே மோதல்

JKR  வெள்ளி, 18 ஜூன், 2010

கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள தமிழ் மாணவர்களிடையே நேற்றிரவு மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இடம்பெறும் யுத்தக் கொண்டாட்டங்களுக்கு பணம் கொடுக்கும்படியும் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதனை கொண்டாடப் போவதாகவும் குடிபோதையில் சென்ற சிரேஸ்ட சிங்கள மாணவர்கள் இளைய தமிழ் மாணவர்களிடம் பணம் கேட்டதாகவும் அதில் ஏற்பட்ட முறுகல் பின்னர் கைகலப்பில் முடிவுற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதனை அறிந்த சிரேஸ்ட தமிழ் மாணவர்கள் இரவோடு இரவாகச் சென்று சிங்கள மாணவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ளதாகவும் சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் துணை வேந்தர் உள்ளிட்டவர்கள் பல்கலைக்கழகத்தில் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr