"புத்தா பார்" எனும் பெயரில் மதுபான விற்பனை நிலையங்கள் பிரான்ஸில் இயங்கி வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.
குறித்த மதுபான சாலைகளில் புத்த பகவானின் சிலைகள் காணப்படுவதாகவும், அந்த சிலைகளுக்கு முன்னால் மதுபானம் அருந்தப்படுவதுடன், நடன நிகழ்வுகளும் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது உண்மையாக இருப்பின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.






















0 கருத்துகள்:
கருத்துரையிடுக