இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பேராதனை பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டம்; பலவந்தமாக அழைத்து சென்ற பொலிஸார்

JKR  புதன், 16 ஜூன், 2010

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களை பொலிஸார் பலவந்தமாக வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர்.



இவ்வாறு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களை பின்னர் பல்வேறு இடங்களில் பொலிஸார் இறக்கி விட்டுச் சென்றிருப்பதாக மாணவர் ஒன்றியத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
சுமார் 400 மாணவர்கள் 5 பஸ்களில் பலவந்தமாக பொலிஸாரினால் ஏற்றிச் செல்லப்பட்டிருப்பதாகவும் எமது  இணையதளத்திற்கு அவர் கூறினார்.
இந்நிலையில், பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சியில் மேற்படி மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கொழும்பு வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr