இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஆயுதமுனையில் 19 இலட்சம் ரூபா கொள்ளை;மிரிஹானையில் சம்பவம்

JKR  திங்கள், 26 ஜூலை, 2010

மிரிஹானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எத்துல்கோட்டை சந்தியில் ஆயுத முனையில் 19 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரினால் வங்கியில் வைப்பிலிடுவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் இருவரே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
இன்று காலை 10.40 மணியளவில், குறித்த பகுதியினூடாக தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரை வழிமறித்த மோட்டார் சைக்கிள் நபர்கள் துப்பாக்கியொன்றைக் காண்பித்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேக நபர்கள் குறித்து இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை என்று கூறிய பொலிஸ் பேச்சாளர், இது தொடர்பான விசாரணைகளை மிரிஹானை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr