இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வ.மா.சபை இணையத்தளத்தில் இன்று முதல் தமிழில் தகவல்கள்

JKR  வியாழன், 1 ஜூலை, 2010

வட மாகாண சபையின் இணையத்தளம் இன்று மீண்டும் ஆரம்பமாகின்றது. புதுப் பொலிவுடன் ஆரம்பமாகும் www.np.gov.lk என்ற இந்த இணையத்தளத்தில் இன்று முதல் தமிழ்-சிங்கள மொழிகளில் தகவல்களைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலுள்ள வட மாகாண ஆளுநரின் உதவி அலுவலகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வின் போது இது ஆரம்பிக்கப்படுகிறது. வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி இன்று உத்தியோகபூர்வமாக இணையத்தளத்தை மீண்டும் ஆரம்பித்து வைக்கின்றார்.
வடமாகாணத்தின் தற்போதைய நிலை, அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை காலமும் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் வெளிவந்தன.
இன்று ஆரம்பமாகும் இணையத்தளத்தின் ஊடாக இன்று முதல் தமிழ், சிங்கள மொழிகளிலும் விரிவான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr