இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மக்கள் விரும்புவது மனிதாபிமான பணிகளையே : ஜனாதிபதி

JKR  புதன், 25 ஆகஸ்ட், 2010

நாட்டில் இவ்வளவு காலம் இடம்பெற்ற அரசியலுக்குத் தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் மக்கள் மனிதாபிமானப் பணிகளையே விரும்புவர் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
.கண்டி மாநகர சபை உறுப்பினர்களை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"இனிவரும் காலங்களில் இவ்வாறான அரசியலை மேற்கொள்ள நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.அரசியலிலிருந்து வேறுபட்டு மனிதாபிமான ரீதியில் கடமையாற்றுவோருக்கே எதிர்காலத்தில் நாட்டு மக்கள் ஆதரவளிப்பர்.
மக்களுடன் இருக்கும் அரசியல்வாதிகள் தேர்தல்களின் பின்னர் தேவைக்கேற்ற வகையில் மாற வேண்டிய அவசியம் இல்லை.
அத்துடன், வாக்குகளைப் பெறும் நோக்கில் நான் ஒருபோதும் செயற்பட்டதில்லை.
தலதா மாளிகைக்கு முன்னாலுள்ள வீதியைத் திறக்கும் பட்சத்தில் 8000 வாக்குகள் புதிதாக எமக்கு கிடைத்திருக்கும். எனினும் அதற்கு நான் ஒருபோதும் இணங்கவில்லை" என்றார்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr