இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வெகுஜன போராட்டம் நடத்தப்படும்; த.ம.வி.புலிகள் கட்சி எச்சரிக்கை

JKR  புதன், 25 ஆகஸ்ட், 2010

ர்மமான முறையில் காணாமல் போயுள்ள தமது கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணி கடத்தப்பட்டிருக்கலாம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
.அவர், 3 தினங்களுக்குள் விடுதலை செய்யப்படாத பட்சத்தில் அவரை விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் வெகு ஜனப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மத்திய செயற்குழு சார்பாக அக்கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜாவினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த சனிக்கிழமை இரவு முதல் குறித்த உறுப்பினர் காணாமல் போன சம்பவமானது சமாதானத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் கவலையையும் எற்படுத்தியுள்ளதுடன், மனிதாபிமானமற்ற ஜனநாயக விரோத செயலாகவும் இது அமைகின்றது.
அத்துடன் மக்கள் மத்தியில் அச்சததையும் பதட்டத்தையும் எற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காணாமல் போயுள்ள மாநகர சபை உறுப்பினரை கடத்தியவர்கள் உடனடியாக விடுதலை செய்து மட்டக்களப்பு மாநகரின் சுமூகமான சூழ்நிலையை பாதுகாக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr