இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அமைச்சர் விமல் வீரவங்ச யாழ் விஜயம்

JKR  புதன், 1 செப்டம்பர், 2010

மைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விசேட அழைப்பின் பேரில் வீடமைப்பு நிர்மாணத்துறை பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (31) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு மக்களுக்கு வீட்டுக் கடனுதவி மற்றும் வீட்டு உறுதி வழங்கும் நிகழ்வில் பங்கெடுத்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வன்னியிலிருந்தும் மாவட்டத்திற்குள்ளிருந்தும் இடம்பெயர்ந்த ஒரு தொகுதி மக்களுக்கு வீட்டுக் கடனுதவி மற்றும் வீட்டு உறுதிகளை வழங்கியுள்ளார்.
தாராக்குளம் மற்றும் குருநகர் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாகச் சென்ற அமைச்சர் வீரவங்ச தலைமையிலான குழுவினர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்து கொண்டனர்.
இதேவேளை நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்ற விமல் வீரவங்ச தலைமையிலான குழுவினர் அங்கு நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுகளில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உடனிருந்தார்



















0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr