.இது தொடர்பில் எட்வின் கிருஷ்ணானந்தராஜா விடுத்துள்ள அறிக்கையில்,
"நேற்று நடைபெற்ற வெடி விபத்து ஒரு துக்ககரமான விடயமாகும். சமாதானம் ஏற்பட்டு மக்கள் அமைதியான வாழ்க்கையை அனுபித்து வரும் நிலையில் இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டமைக்கு எனது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சம்பவத்தில் பலியான பொலிஸார், பொதுமக்கள், மற்றும் சீனத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு எமது அஞ்சலிகளைச் செலுத்துவதுடன் அவர்களின் குடும்பங்களுக்கு எமது கவலையைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்துடன் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தல் வெள்ளை, கறுப்பு கொடிகளைக் கட்டி துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சீனத்தொழிலாளர்கள் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளை இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டுள்ளது துக்ககரமானதாகும். இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் இது போன்ற வெடிமருந்துகளை பொதுமக்கள் நடமாடும் பிரதேசங்களிலோ பொலிஸ் நிலையங்களிலோ களஞ்சியப்படுத்தி வைப்பதனை தவிர்த்து வேறு இடங்களில் வைக்கும் படிம் வேண்டுகொள் விடுக்கிறேன்.
இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், சேதமடைந்த மிருக வைத்தியசாலை, ஆலயம், கமநல சேவை நிலையம் என்பவற்றுக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக