இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பொம்மைவெளி இராஜானிக் குளம் புனரமைக்கப்படவுள்ளது

JKR  திங்கள், 13 செப்டம்பர், 2010

மைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பின் பேரில் யாழ் பொம்மைவெளி இராஜானிக் குளம் பகுதிக்குச் சென்ற அமைச்சர் ஏ.எச்.எமத். பௌஸி குளத்தை புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார்
.யாழ் மாநகரச சபைக்குட்பட்ட இராஜானிக்குளம் நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் அசுத்தமான நிலையில் காணப்படுகின்றது.
முன்னர் தேச நிர்மாண மற்றும் அபிவிருத்தி அமைச்சு குளத்தின் நான்கு பக்க சுவர்களையும் அமைத்திருந்த போதிலும் அது தற்போது சுத்தமாக்கப்பட வேண்டிய நிலையிலுள்ளது. இதனைக் கவனத்தில் கொண்ட அமைச்சர் பௌஸி அவர்கள் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் அவ்விடத்திற்குச் சென்று குளத்தை புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகளை இம்மாத இறுதிக்குள் தொடங்க வேண்டுமென உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் யாழ் மாநகர ஆணையாளர் சவரணபவ யாழ் மாநகர பிரதி முதல்வர் றீகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr