இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கணவனால் வெட்டுண்ட மனைவி உயிரிழப்பு: மஸ்கெலியாவில் சம்பவம்

JKR  வியாழன், 30 செப்டம்பர், 2010

நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா சாமிமலை பிரதேசத்திலுள்ள கவிரவில தோட்டத்தில் இன்று இடம் பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் குடும்பப் பெண்ணொருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவரை வெட்டிய இந்தப் பெண்ணின் கணவர் தானும் கழுத்தில் வெட்டிக் கொண்டதால் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்
.இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :
கவிரவில தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர் குடும்பம் ஒன்றின் கணவன் - மனைவிக்கு இடையில் தனிப்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மனைவி இன்று பிற்பகல் 1 மணியளவில் விறகு பொறுக்கிக் கொண்டு வீடு வந்து கொண்டிருந்த போது வழியில் மறைந்திருந்த கணவன் திடிரென பாய்ந்து கத்தியினால் மனைவியின் கழுத்தினை வெட்டியுள்ளார். இதன் போது கழுத்து வெட்டுக்கு இலக்காகிய மனைவி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதன் பின்பு தலைமறைவாகிய கணவன் மதுவருந்தி விட்டு பின்னர் நஞ்சும் அருந்தி கொண்டு தனது கழுத்தையும் வெட்டிக்கொண்டுள்ளார்.
இதன் பின்பு உயிரிழந்த பெண் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார். தன்னைத்தானே வெட்டிக்கொண்டவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்
அங்கு அவருக்கு அவசரமான சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்பு மேலதிக சிகிச்சைக்காக தற்போது கண்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்தச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளுக்குத்தாயான 47 வயதுடைய வள்ளி என்ற பெண்மணினாவார்.
ஆபத்தான நிலையிலுள்ள இந்தப்பெண்ணின் கணவனின் பெயர் ரட்ணராஜா ( வயது 58 ) என்பவராவார். இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மஸகெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr