இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புலிகளின் 23 முன்னாள் பெண் போராளிகள் விடுதலை

JKR  வெள்ளி, 22 அக்டோபர், 2010

மிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த 23 பெண்கள் இன்று யாழ். தெல்லிப்பளையில் வைத்து புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகரவினால் விடுதலை செய்யப்பட்டனர்.

திருமணமான பெண்கள் அவர்களின் கணவர்களிடமும், ஏனையோர் பெற்றோர்களிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்டவர்களில் கர்ப்பிணியொருவரும் அடங்கியிருந்தார்.அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது கர்ப்பிணியாகியதாகவும் அப்பெண்ணும் அவரின் கணவரும் சரணடைந்து தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2009 ஆண்டு ஓகஸ்ட் மாதம் புலிகள் அமைப்பின் 11,698 அங்கத்தவர்கள் சரணடைந்திருந்ததாகவும் அவர்களில் 305 பெண்கள் உட்பட 4,460 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டியூ குணசேகர கூறினார்.
எஞ்சியுள்ள பெண்கள் நாளை சனிக்கிழமை வவுனியாவில் வைத்து விடுதலை செய்யப்படவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
www.bcgrsrilanka.com எனும் இணையத்தளமும் அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr