இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மத்திய மாகாணத்தமிழ் பாடசாலைகளுக்கு 4 ஆம் திகதி விசேட விடுமுறை

JKR  ஞாயிறு, 31 அக்டோபர், 2010

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் நான்;காம் திகதி விசேட விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்தத்தீர்மானம் தொடர்பாக மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் திருமதி அனுஷியாசிவராஜா கருத்துத் தெரிவிக்கையில் :
தீபாவளி பண்டிகை எதிர்வரும் 5 ஆம் திகதி இடம் பெறவுள்ளதால் தீபாவளிக்கு முதல் நாளான 4 ஆம் திகதி மத்திய மாகாணத்தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கும் இந்தத்தினத்திற்கு பதிலாக எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மத்திய மாகாணத்திலுள்ள கண்டி ,நுவரெலியா ,மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மத்திய மாகாணத்திலுள்ள கல்விப்பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் திருமதி அனுஷியாசிவராஜா மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr