இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கினிகத்தேனையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

JKR  செவ்வாய், 5 அக்டோபர், 2010

நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பிளக்வோட்டர் தோட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞரொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
.கினிகத்தேனை பிளக்வோட்டர் தோட்டத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட இளைஞர் நேற்று முன்தினம் 3 ஆம் திகதி தோட்டத்திலுள்ள ஆற்றைக்கடக்க முற்பட்ட போது ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதன் போது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட இளைஞர் வீடு திரும்பாதது குறித்து அந்த இளைஞனின் உறவினர்களும் அயலவர்களும் தேடிய போது ஆற்றோரத்தில் குறிப்பிட்ட இளைஞனின் செருப்புகளும் அவர் அணிந்திருந்த சாரமும்; இருந்துள்ளமையைக் கண்ணுற்றுனர். இதனைத ;தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிஸாரும் பொதுமக்களும் நேற்று 4 ஆம் திகதி முதல் ஆற்றில் தேடும் பணிகளில் ஈடுபட்டனர். எனினும் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் கரையொதுங்கிய நிலையில் இளைஞனின் சடலம் இன்று 5 ஆம் திகதி மீட்கப்பட்டது. உயிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr