இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினாலாக பாப்பரசரால் நியமனம்:ஜனாதிபதி வாழ்த்து

JKR  வியாழன், 21 அக்டோபர், 2010

கொழும்பு பேராயர் பேரருட்திரு. மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை புதிய கர்தினால்களில் ஒருவராக திருநிலைப்படுத்துவதற்கு பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் பிரேரித்துள்ளார்.

பேராயருடன் மேலும் 24 ஆயர்களின் பெயர்களை பரிசுத்த பாப்பரசர் இன்று பிரேரித்ததாக கொழும்பு ஆயர் இல்லம் அறிவித்தது. இந்த 25 ஆயர்களும் கர்தினால்களாக திருநிலைப்படுத்தப்படும் வழிபாடு வத்திக்கானில் அடுத்த மாதம் 20 ஆம் திகதி நடைபெறும் என ஆயர் இல்லம் குறிப்பிட்டது.
இலங்கையிலிருந்து முதலாவது கர்தினாலாக பேராயர் தோமஸ் குரே ஆண்டகை திருநிலைப்படுத்தப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து இரண்டாவது கர்தினாலாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை திருநிலைப்படுத்தப்படவுள்ளார்.
பேராயர் மல்கம் கர்தினாலாக நியமிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr