இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

த.தே.கூட்டமைப்புக்கு மீண்டும் அழைப்பு விடுக்க தமிழ் கட்சிகளின் அரங்கம் தீர்மானம்

JKR  செவ்வாய், 19 அக்டோபர், 2010

மிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தற்போது நாடு திரும்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை அடுத்த வாரமளவில் தமிழ் கட்சிகளின் அரங்க பிரதிநிதிகள் சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் அடுத்த கூட்டம் இம்மாதம் 30ஆம் திகதி ஈ.பி.டி.பியின் கொழும்பு அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கு பொதுவான தீர்வொன்றை முன்வைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.
ஈ.பி.டி.பி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய விடுதலை முன்னணி, புளொட், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மாநாபா அணி, டெலோ ஆகிய கட்சிகள் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கின்றன.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr