இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

' இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் திட்டமிட்டு தாக்குவதில்லை'

JKR  வியாழன், 21 அக்டோபர், 2010

லங்கைக் கடற்படையினர் தமது கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களை முன்கூட்டி திட்டமிட்ட வகையில் தாக்குவதில்லை என இந்திய கடற்படையின் தென் மண்டல தளபதி வைஸ் அட்மிரல் கே.என். சுசில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"மீனவர்களை முன்கூட்டி திட்டமிட்ட தாக்குவதை இலங்கைக் கடற்படையினர் பின்பற்றவில்லை. கடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடற்படையினருக்கு அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணியின்படி, சுடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இலங்கைக் கடற்படையினர் வேண்டுமென்றே இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஒரு சம்பவம்கூட இருப்பதாக நான் கருதவில்லை. அப்படியான சம்பவங்கள் இருந்தால் முழுமையான விசாரணை மூலம் அவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும்' என வைஸ் அட்மிரல் கே.என். சுசில் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr