இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வன்னியில் கடமையாற்றிய நான்கு வைத்தியர்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பர்

JKR  வெள்ளி, 22 அக்டோபர், 2010

றுதியுத்த காலப்பகுதியில் வன்னிப் பகுதியில் கடமையாற்றிய வைத்திய அதிகாரிகள் 4 பேர் அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளனர்.

வைத்திய அதிகாரிகளான வி. சண்முகராஜா, ரி. சத்தியமூர்த்தி, சிவபாலன், ரி.வரதராஜா ஆகிய நால்வருமே இவ்வாறு சாட்சியமளிப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தமாதம் 19ஆம் திகதி வைத்திய அதிகாரிகளான சண்முகராஜா, சத்தியமூர்த்தி ஆகியோரும் 24ஆம் திகதி சிவபாலனும் 30ஆம் திகதி வரதராஜனும் சாட்சியமளிக்கவுள்ளனர்.
இறுதி யுத்த காலப்பகுதியில் வன்னிப் பகுதியில் கடமையாற்றிய இவர்கள் இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்தபோது குற்றப்புலனாய்வுப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை யுத்தகாலத்தின்போது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியவரும் தற்போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றி வருபவருமான இமெல்டா சுகுமார் எதிர்வரும் 4ஆம் திகதி நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr