இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நீண்டநாள் தடுப்பில் ஆஸியில் தஞ்சம் கோரியோர்

JKR  செவ்வாய், 30 நவம்பர், 2010

ஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய அகதிகளில் பலர் நீணட காலமாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதை இவர்களுக்கு அறிவிக்கப்படாமலேயே இவர்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது வெளிவந்திருக்கின்றது.
ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வந்தவர்களில் பலரே இவ்வாறு நீண்ட காலமாக குடிவரவு அதிகாரிகளால் தடுத்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்த தகவல்கள் வெளி வந்துள்ளன.
நிரம்பி வழியும் தடுப்பு முகாம்களில் பதற்றமும், எதிர்ப்புப் போராட்டமும் இடம்பெற்று வருவதைத் தடுக்கும் முயற்சியாகவே இந்நடவடிக்கையை குடிவரவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றார்கள் எனவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
இது ஒரு முறைகேடான, சட்டத்துக்கு விரோதமான, அதிகார துஷ்பிரயோக செயல்பாடு என்று மனித உரிமைகள் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr