இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

நீண்டநாள் தடுப்பில் ஆஸியில் தஞ்சம் கோரியோர்

JKR  செவ்வாய், 30 நவம்பர், 2010

ஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய அகதிகளில் பலர் நீணட காலமாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் ஆசைக்கு இணங்க மறுத்த காதலி நாக்கை துண்டித்த காதலன்…???

JKR  செவ்வாய், 16 நவம்பர், 2010

ஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரைச் சேர்ந்தவர் தஸ்லீம் தாகீர் (வயது 21). இவர் கேதரீனா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
இருவரும் ஒரே வீட்டில் தங்கி கணவன்-மனைவி போல குடும்பம் நடத்தி வந்தனர்.
ஆனால் கேதரீனாவுக்கு சமீப காலமாக தஸ்லீம் தாகீர் மீது வெறுப்பு ஏற்பட்டது. இதனால் அவருடைய ஆசைக்கு இணங்க கேதரீனா மறுத்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் புகலிடம் கோரி சென்ற 5 இலங்கையர் உயிரிழப்பு

JKR  திங்கள், 10 மே, 2010


அரசியல் புகலிடம் கோரி ஆஸ்திரேலியா சென்ற இலங்கையர்களில் ஐந்து பேர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய பள்ளிகளில் ஆசிரியர்களின் செக்ஸ் லீலைகள்

JKR  செவ்வாய், 13 ஏப்ரல், 2010



woman with attitudeஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பள்ளிகளில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளும் விவகாரம் மாகாண அரசுக்கு பெரும் தலைவலியைத் தந்துள்ளது. மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டிய ஆசிரியர்களே இவ்வாறு மாணவர்களிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் இந்திய வாலிபர் தற்கொலை!!

JKR  வெள்ளி, 19 மார்ச், 2010

Loogix.com. Animated avatars. மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் 28 வயது இந்திய வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
அகமதாபாத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று படித்த ருச்சிகுமார் என்ற இந்த வாலிபர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் இந்திய தம்பதியின் 3 வயது குழந்தை கொலை

JKR  வெள்ளி, 5 மார்ச், 2010


மெல்போர்ன்: ஆஸ்திரேலியா வில் இந்திய தம்பதியின் 3 வயது குழந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்ததால் அது இருநாடுகளுக்கு இடையேயான உறவை பாதித்தது.

இதை தொடர்ந்து இத்தகைய வன்முறை கலாசாரங்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை ஆஸி அரசு எடுத்து வருகிறது.

இந்தியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுப்பதற்காக, யாராவது கத்தியுடன் தெருவில் நடமாடினால் அவர்களுக்கு ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று விக்டோரியா மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

தெருக்களில் நடமாடுபவர்களிடம் அவர்கள் கத்தி வைத்து இருக்கிறார்களா என்று சோதனையிட போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. மைனர்கள் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வாங்கவும் தடை செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே நேற்று இந்தியா வந்த ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி ஸ்டீபன் ஸ்மித், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதலை ஒடுக்க தனது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விவரித்தார்.

மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், எஸ்.எம்.கிருஷ்ணா, கபில் சிபல், வயலார் ரவி ஆகியோரையும் ஸ்டீபன் ஸ்மித் தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்திய தம்பதியின் 3 வயது குழந்தை மெல்போர்ன் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் புறநகர் பகுதியான லலூர் என்ற இடத்தில் வசித்து வரும் பெண் ஹர்பிரீத் கவுர். இந்தியாவை சேர்ந்தவர். ஆஸ்திரேலியாவில் படித்து வருகிறார்.

இவரது கணவர் பெயர் ஹர்ஜித் சிங். இவர்களுக்கு குர்ஷான் சிங் என்ற 3 வயது மகன் உள்ளார். இந்த சிறுவன், மெல்போர்ன் நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்று சாலையோரம் புல்வெளியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவனது உடல் துணியில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சிறுவனின் தந்தை போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுவன் குர்ஷான் சிங், புதன்கிழமை காணாமல் போனான். இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில்தான் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறுவனின் உடலில் எந்தக் காயமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் குழந்தை எப்படிக் கொல்லப்பட்டது என்பது புதிராக உள்ளது.

இருப்பினும் இதை கொலை வழக்காகவே பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது இனவெறித் தாக்குதலா அல்லது தெரிந்தவர்களே கொலை செய்தனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரணை நடந்து வருவதாக விக்டோரியா மாகாண முதல்வர் ஜான் பிரம்பி தெரிவித்துள்ளார்.

பிரதமர் கெவின் ரூட் கண்டனம்...

இந்த சம்பவம் குறித்து பிரதமர் கெவின் ரூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மன்னிக்க முடியாத செயல். இதில் ஈடுபட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவர்.

ராஜ்யசபாவில் கவலை...

இதற்கிடையே சிறுவன் குர்ஷான் சிங் கொல்லப்பட்ட சம்பவம் ராஜ்யசபாவில் இன்று எதிரொலித்தது.

பாஜக உறுப்பினர் வெங்கையா நாயுடு பேசுகையில், ஆஸ்திரேலியாவில் இந்திய சிறுவன் கொல்லப்பட்டது குறித்து அவையில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு துணை சபாநாயகர் ரஹ்மான் கான் அனுமதி தர மறுத்தார்.

இதனையடுத்து வெங்கய்யா நாயுடு இந்த சம்பவத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பதிலளிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து எழுந்த வெளியுறவுத்துரை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, குழந்தையின் படுகொலைக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கிருஷ்ணா, படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை ஆஸ்திரேலிய அரசிடம் இருந்து இந்த படுகொலை சம்பவம் குறித்து முழு தகவல் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய போலீசார் விரைவில் குற்றவாளியை கண்டு பிடிப்பர் என நம்புவதாகவும்

ஆஸ்திரேலியாவில் வன்முறை தாக்குதலுக்கு சதி செய்த 5 பேருக்கு ஜெயில் தண்டனை

JKR  செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

Flag Australia animated gif 240x180 ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ஆஸ்திரேலியா பங்கு கொண்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் வன்முறை தாக்குதல் நடத்துவதற்கு சதி செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நிசவுத் வேல்ஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் 5 பேருக்கும் 23 முதல் 28 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்ற 5 பேரில் 4 பேர் லெபனான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ஏழையைப் போல இருங்கள்: இந்திய மாணவர்களுக்கு ஆஸி. அறிவுரை

JKR  ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010


மெல்போர்ன்: தாக்குதலில் இருந்து தப்பிக்க ஏழைகளை போல இருங்கள். பணம், நகை உள்ளிட்டவற்றை வைத்திருப்பது போல காட்டிக் கொள்ளாதீர்கள், அடக்கம், ஒடுக்கமாக இருங்கள் என்று இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இனவெறி தாக்குதலுக்கு ஆளாவதாக தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இதில் பெரும்பாலானவை இரவு நேரத்தில் தனியாக செல்லும் மாணவர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்கள் தான் நடப்பதாக ஆஸ்திரேலிய போலீசார் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், இதுபோன்ற தாக்குதலில் இருந்து இந்திய மாணவர்கள் தப்பிக்க, விலை உயர்ந்த பொருட்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ஏழைகளைப் போன்ற தோற்றத்துடன் வளைய வருமாறு விக்டோரியா மாகாண போலீஸார் இந்தியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

இதுகுறித்து விக்டோரியா காவல்துறை தலைமை ஆணையர் சிமோன் ஓவர்லேண்ட் இதுபற்றி பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:

இந்திய மாணவர்கள் தங்கள் மீதான வன்முறை யை தவிர்க்க, தங்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு ஏழைகளைப் போல காட்டிக்கொள்ளுங்கள்.

விலை உயர்ந்த எலெக்ட்ரானிக் உபகரணங்கள், ஐபாட், கடிகாரம், ஆபரணங்கள் போன்றவற்றை வெளியே தெரியும் வகையில் வைத்திருக்காதீர்கள். இதன் மூலம் ஓரளவு வழிப்பறி போன்ற வன்முறை தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம்.

நேரம் கடந்த பயணங்களை தவிர்க்க எங்கு பாதுகாப்பாக இருக்க முடியுமோ அங்கேயே தங்கிவிடலாம். சர்வதேச அளவில் பெரிய இனப் பிரச்னைகளை கிளப்பும் இந்த வன்முறை தாக்குதல்கள் சமாளிக்க மாணவர்களும் தங்கள் தரப்பில் சில முயற்சிகளை மேற்கொள்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr