இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சிகிரியாவில் காணாமல் போன குழந்தையும் தாய் முன்னாள் காதலன் வீட்டிலிருந்து மீட்பு

JKR  வியாழன், 23 டிசம்பர், 2010

சிகிரியா மலைக்குன்றைப் பார்வையிடச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த பெண்ணொருவரும் அவரது குழந்தையும் குறித்த பெண்ணின் முன்னாள் காதலனின் கல்கிஸை வீடொன்றிலிருந்து பொலிஸாரால் இன்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பாதுக்க, மீபே பகுதியைச் சேர்ந்த மேற்படி பெண்ணும் அவரது 6 மாதக் கைக்குழந்தையும் அவர்களது குடும்பத்தாருடன் கடந்த 20ஆம் திகதி சிகிரியா குன்றுக்குச் சென்ற போது மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தார் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை கல்கிஸை வீடொன்றிலிருந்து அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
தனது கணவனின் உறவு திருப்தியின்மையால் தன் முன்னாள் காதலனை சிகிரியாவுக்கு வரவழைத்து அவருடன் மேற்படி கல்கிஸை வீட்டுக்கு வந்ததாக குறித்த பெண், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr