இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

துணுக்காய் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

JKR  திங்கள், 27 டிசம்பர், 2010

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் தேராங்கட்டையில் கிணறொன்றிலிருந்து ஆணின் சடலம் இன்று திங்கட்கிழமை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி காணாமல்போன அங்கமுத்து பாலகிருஷ்னண் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மாடு மேய்த்துக்கொண்டு காட்டு வழியால் சென்ற ஒருவர், பாழடைந்த கிணற்றுக்குள் சடலமொன்று மிதப்பதைக் கண்டு பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில், பொலிஸாரின் உதவியுடன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அங்கமுத்து பாலகிருஷ்னண் என உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நேற்றிரவு வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
47 வயதான அங்கமுத்து பாலகிருஷ்னண் என்பவர் தேராங்கட்டையிலுள்ள அவரது ஊரில் இம்மாதம் 7ஆம் திகதி காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr