இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மீனவர் படுகொலைகளைக் கண்டித்து பிப். 6ல் வைகோ தலைமையில் உண்ணாவிரதம்

JKR  வெள்ளி, 28 ஜனவரி, 2011

லங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து பிப்ரவரி 6ம் தேதி வைகோ தலைமையில் நாகப்பட்டனத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று மதிமுக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. கடந்த 30 ஆண்டுகளாக, இலங்கைக் கடற்படையினர், சர்வதேச கடல் பரப்பிலும், இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளேயும் நுழைந்து, அங்கு மீன் பிடிக்கின்ற தமிழக மீனவர்களின் வலைகளை அறுப்பதும், படகுகளை உடைத்து நொறுக்குவதும், தமிழக மீனவர்களின் ஆடைகளைக் களைந்து கடலுக்கு உள்ளே தூக்கி வீசுவதும், சுட்டுக் கொல்வதும் வாடிக்கையாகி விட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தச் சம்பவங்கள், வாரம் தவறாமல் நடக்கின்ற கொடுமை ஆகி விட்டது.
இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல்படையும் வேடிக்கை பார்ப்பது மட்டும் அல்ல, இலங்கைக் கடற்படைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. தமிழக மீனவர்களை ஏமாற்றுகின்ற விதத்தில் முதல்வர் கருணாநிதி, மத்திய அரசுக்குக் கடிதங்கள் எழுதி, கண்துடைப்பு நாடகம் ஆடுகிறார்.
அண்மையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர் வீரபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். மீனவர் கண்ணீர் உலர்வதற்கு உள்ளாகவே, புஷ்பவனம் மீனவர் ஜெயக்குமார், இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டதும், தமிழக மீனவர்கள் உள்ளத்தில் குமுறலையும், இனி நம் உயிர்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்கிற கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்களைப் படுகொலை செய்கின்ற, இலங்கைக் கடற்படையை இயக்கும் சிங்கள அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவும், இனி தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டால், அதற்கு கடமை தவறும் இந்திய அரசுதான் பொறுப்பாளி ஆகும் என்பதைச் சுட்டிக்காட்டி, மத்திய மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கவும், தமிழக மீனவர்களின் துயரத்தில் பங்கு ஏற்கவும், பிப்ரவரி 6 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று, நாகப்பட்டினத்தில், மதிமுக உண்ணாவிரதம் மேற்கொள்கிறது.
பொதுச் செயலாளர் அதற்கு வைகோ தலைமை ஏற்கிறார் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr