இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

மண்டேலா வீடு திரும்பினார்

JKR  வெள்ளி, 28 ஜனவரி, 2011

தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ள நிலையில், அவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் இரு தினங்களாக சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
சுவாச நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தென்னாப்பிரிக்க அதிககாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு நல்ல மருத்துவ பராமரிப்பு வழங்கப்படுவதாகவும் அவரது உடல் நிலை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்றும் துணை அதிபரான ஹலமே மொட்லாந்தே தெரிவித்துள்ளார்.
மண்டேலா அவர்கள் நல்ல மனோதிடத்துடன் இருப்பதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளுக்கு அவரது உடல்நிலை நல்ல பலனைக் காண்பபித்திருக்கிறது என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விஜய் ராம்லக்கன் கூறியுள்ளார்.
ரோபன் தீவுகளில் இருந்தபோது மண்டேலா காச நோயால் அவதியுற்றிருந்தார். தவிர சுவாசத்தொற்று நோய் ஒன்றும் ஏற்பட்டிருந்தது.
மண்டேலாவால் முன்னைப்போல நடமாட முடியாது என்று தெரிகிறது.
கடந்த பல வருடங்களாகவே அவரால் மற்றவரின் உதவியுடன் மட்டுமே நடக்க முடிகிறது.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr