இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

வன்முறையை பிரயோகிப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது

JKR  திங்கள், 31 ஜனவரி, 2011

மீனவர்கள் விடயத்தில் வன்முறையைபிரயோகிப்பது எந்தச் சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாததாகும் என இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவின் இலங்கை விஜயத்தின் பின்னர் இந்தியா, இலங்கை நாடுகளில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.அக்கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய - இலங்கை நாடுகளுக்கிடையிலான கடலில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த இந்திய அரசாங்கத்தின் ஆழ்ந்த கவலையை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ், வெளியிட்டார்.
இச்சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்வாறான சம்பவங்கள் இனி இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். எல்லை தாண்டி இலங்கையின் கடல்பரப்புக்குள் வரும் இந்திய மீனவர்கள் உட்பட அனைத்து மீனவர்களையும் மனிதாபிமான ரீதியில் நடத்த வேண்டும் என்பதே இலங்கையின் கொள்கை என்பதை இலங்கை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையில் மிக நெருங்கிய இரு தரப்பு உறவுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஜீவனோபாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மீனவர்களின் நலன்களில் தாக்கம் செலுத்தும் எந்த விடயமும் இலங்கையின் மிகுந்த கரிசனைக்குரியதாகும்.
அதனால் இச்சம்பவங்கள் குறித்த உண்மைகளை கண்டறிவதற்கு இலங்கை அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. விசாரணைகள் தொடரும் நிலையில் மேலதிக தகவல்களை தருமாறு இந்திய தரப்பிடம் இலங்கை கோரியுள்ளது.
சர்வதேச எல்லையை கடந்துவரும் மீனவர்களை கையாள்வதற்காக மீன்பிடி ஏற்பாடுகள் தொடர்பாக 2008 ஒக்டோபர் 16 ஆம் திகதி விடுக்கப்பட்ட கூட்டறிக்கை சம்பவங்களைக் குறைவடையச் செய்திருந்தன என்பது இரு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் ஏற்பாடுகளை மேற்கொண்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
மீன்பிடி தொடர்பான கூட்டுச் செயற்குழுவின் அடுத்த கூட்டத்தை விரைவாக கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr