இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

படுக்கையறைக்குள் அத்துமீறி நுழைந்து பிரித்தானிய பெண்ணை துன்புறுத்திய இலங்கையருக்கு சிறைத்தண்டனை

JKR  வெள்ளி, 21 ஜனவரி, 2011


பிரித்தானிய பெண்ணொருவரின் படுக்கையறைக்குள் நுழைந்து தனது கணவருக்கு அருகில் உறங்கிக்கொண்டிருந்த அப்பெண்ணை தொந்தரவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

28 வயதான இந் நபர் சுத்திகரிப்பு ஊழியராக பணியாற்றியவர் ஆவார். மதுபோதையுடன் இவர் மேற்படி பிரித்தானிய பெண்ணின் படுக்கையறைககுள் நுழைந்து அவரை தொந்தரவுக்குள்ளாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மது அருந்தியமைக்காகவும் இவர் மீது விரைவில் வழக்குத் தொடரப்படவுள்ளது.
'நான் மது போதையயுடன் அப்பெண்ணை துன்புறுத்தினேன்' என நீதிமன்றத்தில் மேற்படி நபர் ஒப்புக்கொண்டார். கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஒருநாள் அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'எனது படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது யாரோ ஒருவரின் கை எனது பின்புறத்தில் படுவதை உணர்ந்தேன். அது எனது மகனாக இருக்கலாம் என நான் கருதினேன். ஏனெனில் ஒருவர் படுக்கையறையலிருந்து வெளியேறுவதை கண்டேன். எனது மகன் உறக்கத்தில் நடக்கும் பழக்கமுள்ளவர் என்பதால் எனது கணவரை எழுப்பினேன். ஆனால் மகனின் அறைக்குச்சென்று பார்த்தபோது மகன் உறங்கிக்கொண்டிருப்பதை அறிந்தேன்' என மேற்படி பிரித்தானிய பெண் தெரிவித்துள்ளர்.
எஸ்.பி. என குறிப்பிடப்படும் மேற்படி இலங்கையர் சிறைத்தண்டனைக் காலம் முடிந்தவுடன் துபாயிலிருந்து நாடுகடத்தப்படுவார் என நீதிபதி ஹமனட் அப்துல் லத்தீவ் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr