இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

விமானப்படை வீரர் தற்கொலை

JKR  திங்கள், 2 மே, 2011

தி ருகோணமலை மொறவெவ விமானப்படை தளத்தில் கடமையாற்றி வந்த விமானப்படை வீரரொருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கண்டி, பார ரோசவத்த பகுதியை சேர்ந்த பி.கே.சமிந்த குமார என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார்.
கடமையிலிருந்த இவர் தனது காதலியுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் தன்னைத்தான் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவர் பயன்படுத்திய தொலைபேசியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவரின் சடலத்தை பார்வையிட்ட திருகோணமலை நீதிமன்ற நீதவான், சடலத்தை அவரின் உறவினர்கள் பார்வையிட்ட பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். திருகோணமலை பொதுவைத்தியசாலையில் இவரது சடலம் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மொறவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr