இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பெருந்திரளான மக்கள் புடைசூழந்து கண்ணீர்மல்க தோழர் சங்கரப்பிள்ளை சிவதாசன் அவர்களின் பூதவுடல் தீயுடன் சங்கமாகியது!

JKR  வியாழன், 17 நவம்பர், 2011


ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது மாமனாரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவரும் தொழிற்சங்கவாதியும் கலைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான தோழர் சிவதாசன் அவர்கள் கடந்த 13ம் திகதி காலமானார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றதைத் தொடர்ந்து அன்னாரது பூதவுடல் காங்கேசன்துறை பிரதான வீதியூடாக மாவிட்டபுரம் நகுலேஸ்வரத்தை சென்றடைந்தது. அங்கு இடம்பெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து பெருந்திரளான மக்கள் புடைசூழ்ந்து கண்ணீர் மல்க தோழர் சிவதாசனின் பூதவுடல் தீயுடன் சங்கமமாகியது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சமய சடங்குகளைத் தொடர்ந்து சிதைக்கு தீ மூட்டினார். இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார். சில்வேஸ்திரி அலென்ரின் உதயன் உள்ளிட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மற்றும் அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்கங்களின் துறைசார்ந்தோர் சமயத் தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் கல்விச் சமூகத்தினர் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.














0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr